அத்தியாயம் 22
நான் யார்?
அன்றுவரை தான் என்றுமே கேட்டிராத புதுத் தொனி கண்டத்திலிருந்து ஒலிக்கவும், அந்த விநாடிவரை தான் ஆயுளில் பார்க்காத புத்தொளி முகத்தில் படர்ந்து நிற்கவும், “இதோ என்னைப் பார் மஞ்சளழகி’’ என்று தன்னை அழைத்த தந்தை முகத்தை ஏறெடுத்து நோக்கிய அக்ஷயமுனைப் பாவை, தந்தை குரலிலும் முகபாவத்திலும் ஏற்பட்ட அந்தப் புது மாற்றத்தைக் கண்டதும் குழம்பினாள். எந்தச் சமயத்திலும் வஞ்சகமும் குரூரமும் நிரம்பும் பார்வையை உடையவரும், அந்தக் குரூரத்திலும் வஞ்சகத் திலுங்கூட இனியதொரு தோற்றத்தையும் நிதானத்தையும் முகத்தில் படரவிட்டுக் கொள்ளக் கூடியவருமான தன் தந்தையின் முகத்தில் அந்தச் சமயத்தில் இயற்கையாக வுள்ள துஷ்டத்தனமும், வீரமும் அடியோடு மறைந்து விட்டதையும் பொறுப்பும் கடமையும் தோய்ந்த கவலைத் தோற்றமே அதில் நிரம்பிக் கடந்ததையும் கண்ட மஞ்சளழகியின் இதயத்தில் தந்தையின் நிலைபற்றிய குழப்பத்தோடு ஆச்சரியமும் கலந்துகொண்டது. ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்தின் உப தளபதியைக்கூடத் தீர்த்துக் கட்டி அவனையும் சித்திரமாகத் தீட்டி ஸ்ரீவிஜயத்தின் சக்தியைக் கூட லட்சியம் செய்யாமல் அதே அறையில் பலரும் பார்க்கும்படியாகப் படத்தை மாட்டி வைத்திருக்கும் நெஞ்சுரமுள்ள தன் தந்தையின் தைரியமெல்லாம் அப்பொழுது பறந்துவிட்டதையும் ஏதோ பெரும் மனச் சுமையொன்று அவர் சித்தத்தை அழுத்திக் கொண்டிருப் பதையும் கவனித்த மஞ்சளழக, தந்தையின் இதயச் சுமை எதுவாயிருக்கும்’ என்று தன்னைத்தானே ஒரு விநாடி கேட்டுக்கொண்டு விடை காணாமல் தவித்தாள். அந்தக் கேள்விக்கு விலை அக்ஷயமுனைக் கோட்டைத் தலைவன் அடுத்துத் துவங்கிய பேச்சிலிருந்தது. விடை காணக்காண, விடையின் பொருள் மெள்ள விரிய விரிய, மஞ்சளழகியின் உணர்ச்சிகள் பெரும் துடிப்பைப் பெற்றன. உணர்ச்சித் துடிப்பினால் அவள் இதயத் துடிப்பும் புத்தியின் வேகமும் அபரிமிதப்பட்டு அவள் எதையும் தாங்க சக்தியை இழந்த நிலையை அடைந்தாள்.
அக்ஷயமுனைக் கோட்டைத் தலைவன், “இதோ பார் மஞ்சளழகி” என்று அழைத்துவிட்டானே தவிர, அந்தச் சொற்களுக்கும் அவன் சம்பாஷணையைத் தொடங்கு வதற்கும் இடைக்காலம் அவசியத்துக்கு அதிகமாகவே இருந்தது. தன் அழைப்புக்கணெங்கித் தன்னை ஏறெடுத்து நோக்கிய தன் மகளின் விழிகளை அவன் விழிகள் சந்திக்க மறுத்தன. யாரையும் அலட்சியமாக ஆராய்ச்சி செய்யும் சுபாவமுள்ள அவன் வஞ்சகக் கண்கள் ஒரு விநாடி மட்டும் அவள் பார்வையுடன் கலந்தனவே தவிர அடுத்த விநாடி திரும்பி அக்கம் பக்கத்திலிருந்த சுவர்களையே நோக்கின. கைகளைப் பின்புறத்தில் கட்டிக்கொண்டும் சில சமயங் களில் சுவரையும், சில சமயங்களில் தரையையும் நோக்கக் கொண்டு மஞ்சளழகியை விட்டுச் சற்றுத் தள்ளியே நின்றும் பேசினான் பலவர்மன். மஞ்சளழகயை அழைத்து அவள் ஏறெடுத்துப் பார்த்த சில விநாடிகளுக்குப் பிறகு மிகுந்த தயக்கத்துடனும் ஆனால் கடமையைச் செய்கிறோமென்ற எண்ணத்தால் உறுதியுடனும் மீண்டுமொரு முறை, “மஞ்சளழக! மகளே!” என்று அழைத்த அக்ஷயமுனைக் கோட்டைத் தலைவனுக்கு, “ஏன் அப்பா! என்று கனிவுடன் பதில் கொடுத்தாள் மனமெல்லாம் காதலால் கனிய உட்கார்ந்திருந்த அந்தப் பருவக் கன்னி.
“மஞ்சளழகி! எத்தனை அழகான பெயர்! உன் பசும் பொன் நிறத்துக்கு இதைவிட அழகான பெயரை யார் சூட்ட முடியும்? உன் மஞ்சள் உடலை நானும் பார்த்திருக் கிறேன். ஆனால் எனக்கு ஏன் இந்தப் பெயர் மனத்தில் பதியவில்லை? ௨ம்...வளர்ப்பவன் பார்வை வேறு, அடைந்து அள்பவன் பார்வை வேறு. ஒருவனுக்குத் தோன்றாதது இன்னொருவனுக்கு தோன்றுகிறது” என்று தானே ஏதோ பேசிக்கொண்ட அக்ஷயமுனைத் தலைவன், “மஞ்சளழக! உனக்கு இந்தப் பெயரே தற்சமயம் இருக்கட்டும். நான் வைத்த பெயர், உன் இயற்பெயர், உலகத் துக்குத் தெரியும் காலம் வந்தாலும் வரும். வராவிட்டாலும் இல்லை. இன்று அதைப்பற்றி நான் எதுவும் நிச்சயமாகச் சொல்ல முடியாது” என்று ஏதோ புதிர் போடும் முறையிலும் கூறினான்.
அவன் சொற்களின் பொருள் எதுவும் அவளுக்குத் தெரியாததால், அவள் குழம்பினாள். அந்தக் குழப்பத் துடன் கேட்கவும் செய்தாள், “நீங்கள் என்ன சொல் கிறீர்கள்?” என்று.
“உள்ளதைச் சொல்கிறேன் மஞ்சளழக! உள்ளதைச் சொல்லும் காலம் வந்து விட்டது. அது இத்தனை சக்கரம் வருமென்று நான் எதிர்பார்க்கவில்லை. வந்தபின் என் கடமையைச் செய்வது அவசியமாகிறது. ஆகவே இனியும் காலம் தாழ்த்துவது முறையல்ல” என்றான் பலவர்மன், எதிரேயிருந்த ஆசனத்தின் குமிழியைத் தடவிக் கொண்டே.
“நீங்கள் சொல்வது பெரும் புதிராயிருக்கிறது தந்தையே.” என்றாள் மஞ்சளழகி குழப்பம் ஒலித்த குரலில்.
பலவர்மன் ஒரு விநாடி மட்டும் அவளைத் திரும்பி நோக்கிவிட்டு, “உன் வாழ்க்கையே ஒரு பெரும் புதிர் மகளே?” என்று திடமாகச் சொன்னான்.
“விடுகதையை விண்டுதான் சொல்லுங்களேன்” என்று கேட்டாள் அவள்.
“முழுவதும் விண்டு சொல்ல எனக்கு உரிமை இல்லை மகளே! ஆனாலும் ஓரளவு சொல்லலாம், சொல்வதை மட்டும் கேட்டுக்கொள். காலம் வரும்போது மற்றதையும் நீ அறிவாய்.” என்று மீண்டும் அவளுக்கு முதுகைத் திருப்பிக் கொண்ட அக்ஷயமுனைக் கோட்டைத் தலைவன், “மகளே! நம் இருவர் வாழ்க்கையிலும் பெரும் திருப்பங்களை ஏற்படுத்திய நாள் இது. இன்று வந்த இளைய பல்லவன் உன் வாழ்க்கையில் மட்டுமல்ல என் வாழ்க்கை யிலும், ஏன், இந்த ஸ்ரீவிஜய சாம்ராஜயத்தின் வாழ்க்கை யிலும் குறுக்கே புகுந்திருக்கிறான். அதன் விளைவு நல்லதா பொல்லாததா எனக்குத் தெரியாது. ஆனால் அவன் குறுக்கீட்டை, செல்வாக்கை இனி இந்த அக்ஷ்யமுனையில் அவன் துவங்கக் கூடிய அலுவல்களை நானோ நீயோ தடை செய்ய முடியாது. ஆகவே அவற்றை நமக்கும் நமது நாட்டுக்கும் எத்தனை பயனுள்ளதாகச் செய்துகொள்ள முடியுமோ அத்தனை பயனுள்ளதாகச் செய்துகொள்ள வேண்டும். புரிகிறதா?” என்று கேட்டான்.
உண்மையில் அஷயமுனைக் கோட்டைத்தலைவன் எதைச் சொல்ல முயல்கிறான் என்பது அவளுக்குப் புரிய வில்லை. அகவே,“புரியவில்லை.” என்று உண்மையைச் சொன்னாள் அவள்.
“புரியாதது எனக்கு வியப்பாயில்லை மகளே! உனக்கு இன்று பல விஷயங்கள் புரியவில்லை. உதாரணமாக என் பேச்சும் போக்கும் உனக்குப் புரியவில்லை. ஒரு தந்தை மகளிடம் பேசத்தகாத வார்த்தைகளை நான் பேசினேன் அல்லவா?” என்று கேட்டான் அவன்.
“ஆம், பேசினீர்கள்” என்றாள் அவள், அவன் எதற்காக அந்தக் கேள்வியைக் கேட்கிறான் என்பதை அறியாமல். “ஏன் அப்படிப் பேசுகிறீர்கள் என்று நீ கேட்டாய்,” என்று பலவர்மன் பழைய கேள்வியை நினைப்பூட்டினான்.
“ஆம், கேட்டேன்.” என்றாள் அவள் - எதற்காக அந்தப் பழைய கேள்விகளைத் திரும்ப வலியுறுத்துகறார் தந்தை என்பதைப் புரிந்துகொள்ள முடியாமல் மிகுந்த குழப்பத்துடன்.
“அந்தக் கேள்விக்குப் பதில் சொல்வது அத்தனை சுலபமல்ல மகளே!” என்ற பலவர்மன் சோகப் பெருமூச்சு விட்டான்.
“ஏன்? என்ன கஷ்டம் அதில்?” என்று அவள் வினவினாள், குழப்பம் முன்னைவிட அதிகமாக.
“சுமார் பத்தொன்பது வருஷங்களின் பொய்யை உடைப்பது அத்தனை சுலபமென்று நினைக்கிறாயா நீ?” என்று கேட்டான் பலவர்மன்.
“பத்தொன்பது வருஷங்களின் பொய்யா 7”
“ஆம்.
“அத்தனை நாள் பொய் ஏன் மறைந்து கிடந்தது?”
“மெய்யைச் சொல்ல அவசியமில்லை.
“இப்பொழுது அவசியம் ஏற்பட்டிருக்கிறதா?” “சந்தேகத்துக்கிடமின்றி ஏற்பட்டிருக்கிறது. இல்லா விட்டால் இந்த விஷயத்தை இன்று நான் பேசத் துவங்கி இருக்கமாட்டேன்.
“அவன் சொற்கள் அவளை மேலும் மேலும் குழப்பின. அன்று காலை முதலே உணர்ச்சிகள் நரம்புகளைப் பல வழிகளில் உருட்டிக் கொண்டிருந்ததால் பெரும் பலவீன மடைந்திருந்தாள் மஞ்சளழகி. இளையபல்லவன் இதயத் தைப் பறித்துக்கொண்டதால் ஏற்பட்ட சிந்தனைகள், கடற்கரை நிகழ்ச்சியில் கண்ட விளைவு களால் உண்டான மனநெகழ்ச்சி, தவிர நடனத்தில் ஆயாசம் எல்லாமாகச் சேர்ந்து அவள் கைகளுக்கும் கால்களுக்கும் பெரும் சோர்வைக் கொடுத்தன. பலவர்மன் அவளைத் திரும்பிப் பார்க்காமலே மேற்கொண்டும் பேசினான். “மகளே! உனக்கு இப்பொழுது வயது இருபதை எட்டிக் கொண் டிருக்கிறது. சுமார் பத்தொன்பது ஆண்டுகளாக நீயும் நானும் எத்தனையோ மிகழ்ச்சியுடனிருந்தோம். அந்த மகழ்ச்சி மேலும் நீடிக்குமா நீடிக்காதா என்பது நான் சொல்வதைக் கேட்டதும் உன் மனத்தில் விளையக்கூடிய உணர்ச்சிகளைப் பொறுத்தது. ஆம்! நான் சொல்லப் போகும் விஷயம் எத்தகைய மாற்றத்தையும் ஏற்படுத்தக் கூடியதுதான். அந்த மாற்றம் மகிழ்ச்சியையும் அளிக்கலாம், வெறுப்பையும் அளிக்கலாம்” என்று கூறிவிட்டுச் சற்று நிதானித்த அவன், “வெறுப்பை அளிப்பதானால் அதையும் நான் ஏற்கக் கடமைப்பட்டவன். ஒரு தந்தை மகளிடம் பேசக்கூடாத வார்த்கைளை எப்படிப் பேசினேன் என்று கேட்டாய். பேசினதற்கு உண்மைக் காரணம் தெரியுமா?” என்று கேட்ட பலவர்மன் சரேலெனத் திரும்பி அவளைக் கூர்ந்து நோக்கினான்.
காரணத்தை ஓரளவு அவள் ஊ௫த்துவிட்டதால் அவள் கண்கள் அவனை வெறித்து நோக்கின. அவள் முகத்தில் ரத்தம் குபீரெனப் பாய்ந்து உணர்ச்சி வெள்ளத் தைக் காட்டின. “உம் தயங்க வேண்டாம், சொல்லுங்கள்,” உணர்ச்சி வேகத்தில் வெளிவந்தன அவள் சொற்கள்.
சிரமப்பட்டு பலவர்மன் முகத்தில் பெரும் மாறுதலும் உறுதியும் தாண்டவமாடின. அவன் பதில் கூறியபோது சொற்களும் திடமாகவே உதிர்ந்தன. “நீ என் மகளுமல்ல, நான் உனக்குத் தந்தையுமல்ல” என்ற பலவர்மன், ஏதோ பெரும் தியாகத்தைச் செய்தவன் போல் அவளை உற்று நோக்கினான்.
திடீரென திடப்படுத்திக் கொண்ட மஞ்சளழகியின் இதயம் வெடித்துவிடும் ஸ்திதிக்கு வந்துவிட்டது. அவன் விஷயத்தை விடுகதையாகத் துவங்கி மெள்ள மெள்ள விவரிக்க முற்பட்டதிலிருந்தே ஏதோ பெரும் ரகசியம் தன் வாழ்வில் புதைந்து கிடக்கிறதென்பதை அவள் ஊ௫த்துக் கொண்டாளானாலும் அந்த ரகசியம் அத்தனை விபரீத வெவிவை ஆத. வசவவள்.. வயதால் மாக இருக்குமென்று கனவுகூடக் காணாததால், எதிர் பாராத விதமாக வெளிப்பட்ட அந்த விபாீத உண்மை அவள் புத்தியை அடியோடு கலக்கத் தலையைச் சுழல வைக்கவே உட்கார்ந்திருந்த ஆசனத்தை அவள் கெட்டி யாகப் பிடித்துக்கொண்டாள். கைகளும் செயலிழந்து போகவே ஆசனத்திலிருந்து விழவும் போனாள்.
அவள் தலை சுழன்றதையும் அவள் தள்ளாடியதையும் பார்த்த பலவர்மன் வெகு வேகத்தில் தாவி அவளைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டான். பிறகு குழந்தையைத் தூக்குவது போல் தன் இரு கைகளிலும் தூக்கிக்கொண்டு சற்று எட்ட இருந்த பஞ்சணையில் அவளைப் படுக்க வைத்துவிட்டு அறைக் காவலரை அழைத்துப் பன்னீரும் விசிறியும் கொண்டுவர உத்தரவிட்டான். பன்னீருடனும் விசிறியுட னும் மஞ்சளழகியின் தோழிமாரும் வந்தனர்.
அவர்களை வெளியே போகச் சொன்ன பலவர்மன் மஞ்சளழகியின் முகத்தில் தானே பன்னீர் தெளித்து விசிறினான். அவன் செய்த சைத்தியோபசாரங்களால் கண் விழித்த மஞ்சளழக தன் பக்கத்தில் அமர்ந்திருந்த பலவர்மனைக் கண்டு மெள்ளப் புன்னகை புரிந்தாள். அந்தப் புன்னகை பலவர்மன் இதயத்தில் அமுதமெனப் பாய்ந்தது. அத்தனை நாள் அவள் பிறவி ரகசியத்தை மறைத்ததற்காக அவள் தன்னை வெறுப்பாளென்று நினைத்த பலவர்மன் அவள் தன்னை வெறுக்கவில்லை யென்பதை அவள் அழகிய அதரங்களில் விளையாடிய புன்னகையிலிருந்து புரிந்துகொண்டதும் ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்தையே அடைந்துவிட்டதாக எண்ணினான். அந்த எண்ணத்தாலும் சுமார் பத்தொன்பது வருஷ காலம் வளர்ந்த பாசத்தாலும் அவள் குழல்களைக் கோதிவிடவும் செய்தான்.
அந்தச் சில நிமிடங்களில் பலவர்மன் அவனிடம் உறைந்து கிடந்த நல்ல குணங்களுக்கு இருப்பிடமாக விளங்கினான். நல்லதும் கெட்டதும் கலந்த மனித ஜன்மத்தில் சிலரிடம் நல்லது அதிகமாவும் சிலரிடத்தில் கெட்டது அதிகமாகவும் காணக்கிடக்கிறது. ஆனால் எப்போ்ப்பட்ட கெட்டவனிடமும் அடிப்படையாகப் பிறவியில் உறைந்துள்ள நல்ல குணங்கள் ஏதாவதொரு சமயத்தில் வெளிவரவே செய்கின்றன. அத்தகைய ஒரு நிலையிலிருந்த பலவர்மனிடம் இதய வஞ்சகம், சுயநலம் எல்லாம் அந்தத் தருணத்தில் மறைந்து அன்பும் பாசமும் மேலெழுந்து நின்றன. அகவே அன்பெல்லாம் ததும்ப மஞ்சளழகியை அழைத்தான் அவன், “மகளே!” என்று.
அவள் புன்முறுவல் மேலும் முகத்தில் நன்றாகப் படர்ந்தது, “ஏன்?” என்று கேட்டாள் அவள்.
“இப்பொழுது எப்படியிருக்கிறது?”
“பாதகமில்லை.
“அதிர்ச்சி தரும் செய்தியைச் சொல்லிவிட்டேன்.
“ஆமாம்.
“எத்தனையோ நிதானமாகத்தான் சொன்னேன்.
“ஆமாம்.
“இருப்பினும் மூர்ச்சையாகிவிட்டாய். உன்மேல் பிசகில்லை. எனக்குச் சொல்லும் முறை தெரியவில்லை. நாகரிக சமூகத்தில் தான் உலாவி வெகுநாள் ஆகிவிட்ட தல்லவா?”
அவள் திற்த்தான். ஏன் சிரிக்கிறாய்!?” என்று வினவினான் பலவர்மன்.
“நீங்கள் நாகரிக சமூகத்தில் பழகி நாளாகிறது. நான் அதைக் கண்டதேயில்லை” என்றாள் அவள்.
“இருப்பினும் நீ...
“சொல்லுங்கள்.” என அசையுடன் கேட்ட மஞ்சளழகி பலவர்மன் கையைப் பிடித்துக் கொண்டாள்.
அந்தப் பிடிப்பில் புத்திரியின் வாஞ்சை பூர்ணமாக ஒடுவதை உணர்ந்த பலவர்மன் அவள் கன்னத்தைத் தடவிக் கொடுத்து, “வேண்டாம் மகளே! மேற்கொண்டும் ஜெ விவரம் கேட்காதே.
நீ எனக்குப் பிறந்த மகளல்ல.
அதை மட்டும் தெரிந்துகொள், போதும்.” என்றான்.
“போதாது.
முழுதும் சொல்லுங்கள், நான் யார்? எங்கிருந்து என்னைக் கொண்டு வந்தீர்கள்! ’” என்று கேட்டாள் மஞ்சளழகி.
“நான் கொண்டு வரவில்லை.” என்று சொன்ன பலவர்மன் வருத்தம் தோய்ந்த புன்முறுவலொன்றைத் தன் வதனத்தில் படரவிட்டுக் கொண்டு, “ நான் எங்கிருந்தோ உன்னைத் தூக்கிக்கொண்டு வந்ததாக நீ நினைப்பதில் தவறில்லை மகளே! என் தற்கால வாழ்க்கை யாரையும் அபகரித்துச் செல்லும் கொள்ளைக்காரனையே யாருக்கும் நினைப்பூட்டும். நான் நல்லவனல்ல. என் வாழ்வில் நான் பல கொடிய செயல்களைப் புரிந்திருக்கிறேன். ஆனால் உன் விஷயத்தில் நான் எந்தப் பாவத்தையும் செய்யவில்லை. சுமார் பத்தொன்பது வருஷங்களுக்கு முன்பு நீயாக என்னிடம் வந்து சேர்ந்தாய் ‘‘ என்று கனவில் பேசுவது போல் பேசினான். “ஆம். பத்தொன்பது வருஷங்களுக்கு முன்பு நடந்த கதை அது. அப்பொழுது நல்ல மழைக்காலம். அக்ஷயமுனையில் வெய்யில் எவ்வளவு உக்கிரமோ மழையும் அப்படி உக்கிரமென்பதுதான் உனக்குத் தெரியுமே. நான் சொல்லும் வருஷத்தில் மழை மிகப் பலம். அக்ஷயமுனையின் துறைமுகத்திலிருந்த கப்பல்களில் இரண்டு கவிழ்ந்துவிட்டன. இருளைக் இழித்த மின்னலும் அக்ஷயமுனைக் கோட்டையைப் படுதூளாக்குவதுபோல் சப்தித்த இடிகளும் பிரளயத்தைச் சிருஷ்டிக்க முற்பட்டது போல் இருந்தன. நான் இதே அறையில்தான் அன்றும் உட்கார்ந்திருந்தேன். வெளிக்கதவு தடதடவென்று இடிபட்டது. என்ன காரணத்தாலோ காவலரை ஏவாமல் அன்று நானே சென்று வெளிப் பெருங் கதவைத் திறந்தேன். சொட்டச் சொட்ட மழையில் நனைந்த வீரனொருவன் கையில் சுற்றிய ஒரு துணியுடன் நின்றிருந்தான். என்னை இடித்துத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்த அவன் என்னையும் கூட வரும்படி சைகை செய்தான். நான் அவனை அழைத்துக்கொண்டு இந்த அறைக்கு வந்தேன். இதோ நீ படுத்திருக்கும் அதே மஞ்சத்தில் அவன் துணிச் சுருளை வைத்துப் பிரித்தான். அதற்குள் நீ இருந்தாய். அப்பொழுது உனக்கு ஒரு வயது. உன் மலர்க் கண்கள் மூடிக்கிடந்தன். உன் கனி இதழ்கள் மிகவும் சிவந்திருந்தன. அப்பொழுதும் இதே மஞ்சன் நிறம் நீ...” என்று சற்று அவள் சரிதையை நிறுத்திய பலவர்மன். “இன்றும் இங்கு படுத்திருக்கிறாய். அதே மஞ்சம். அதே பெண். ஆனால் எத்தனை வேறுபாடு?” என்று கூறினான்.
மஞ்சளழகியின் சித்தம் பல இசைகளில் சுழன்றது. “வந்தவன் யார்?” என்று மெள்ளக் கேட்டாள்.
“அவன் ஒரு வீரன்.
“என்னை மட்டும் இங்கு விட்டுப் போய் விட்டானா?”
“இல்லை. உன்னுடன் ஓர் ஓலையையும் விட்டுப் போனான்.
“அந்த ஓலையில்?” மஞ்சளழகி கேள்வியுடன் கண்களை உயரத் தூக்கினாள்.
“நீ யார் என்பது இருந்தது.” என்றான் பலவர்மன்.
“நான் யார்?” என்று கேட்டாள் மஞ்சளழகி.
“சொல்ல எனக்கு உரிமையில்லை. துணிவும் இல்லை.” திட்டமாக வந்தது பலவரா்மனின் பதில்.