அத்தியாயம் 36
தளமிழந்த கப்பல், மதியிழந்த தளபதி!
பழுது பார்ப்பதற்காகப் பெரும் கயிறுகளைக் கொண்டு கரையோரம் இழுக்கப்பட்டுக் கரையில் பாதியும் அலை மோதும் நீரில் பாதியுமாகப் பெரும் திமிங்கலம் போல் கிடந்த இளையபல்லவனின் போர்க்கலத்தில் நடந்துகொண்டிருந்த வேலையைக் கண்ட மஞ்சளழக, “இந்த விபரீதம் எதற்காக நடக்கிறது?” என்று எண்ணித் திக்பிரமை பிடித்தபடி. சில விநாடிகள் அந்த மரக்கலத்தின் மீது வைத்த கண்ணை வாங்கமாலே நின்றாள். கோட்டை வாயிலைக் கடந்து வரும்போதே அவளைக் கண்டுவிட்ட கண்டியத்தேவனும் அவள் மரக்கலத்தின் அருகே வந்ததும் எதிர்கொண்டு “வாருங்கள்.” என்ற ஒற்றைச் சொல்லால் அவளை வரவேற்கவும் செய்தான். அந்த ஒற்றைச் சொல்லை அவன் உபயோகித்தபோது அவன் குரலிலிருந்த வெறுப்பையும், துயரத்தையும் கவனித்த மஞ்சளழகி அந்த வெறுப்புக்கும் துயரத்துக்கும் எத்தனை சிறந்த காரண மிருக்கிறது என்பதை மரக்கலத்தை நோக்கிய மாத்திரத்தில் புரிந்நகொண்டாள்.
கரையில் பாதி இழுக்கப்பட்டுப் பக்கவாட்டில் லேசாகச் சாயக்கப்பட்டிருந்த அந்தப் பெரும் மரக் கலத்தின் ஒரு பக்கப் பலகையோ, கண்ணுக்குத் தெரிந் தாலும் அதில் ஒட்டி உறைந்து அரையடி கனத்துக்குமேல் பிடித்திருந்த கடற்பாசியையும், பெரும் கிளிஞ்சல்களையும், நானாவித பற்பலவித சிப்பிகளையும் கடல் நுரைக் கட்டிகளையும் கண்ட மஞ்சளழக அந்தக் கப்பலைப் பழுது பார்த்து ஒரு வருஷத்துக்குமேல் ஆகியிருக்குமென்பதை உணர்ந்து கொண்டாள். தவிர அந்தப் பலகையில் பிடித் திருந்த பாசிகளின் இடையே தெரிந்த பெரும் பிளவுகள் மரக்கல அடிப்பலகைகள் லேசாக இடைவெளியளித்த தையும் குறிப்பிட்டனவாகையால், மரக்கலத்தை அப் போது பழுது பார்க்காவிட்டால் அதைக் கடலில் செலுத்துவது பெரும் அபாயமென்பதையும் மஞ்சளழகி அறிந்துகொண்டாள். சதா கடலில் ஒடும் கொள்ளை யருடன் வருஷக்கணக்கில் பழகியதன் காரணமாக மரக் கலங்களின் நுட்பங்களை அறிந்திருந்த மஞ்சளழகி அந்த மரக்கலத்தின் அடிப்பகுதியை மட்டும் பழுது பார்ப்பது அவசியமாயிருப்பதை உணர்ந்து கொண்டாளானாலும், மரக்கலத்தைச் செப்பனிடும் தொழிலாளிகள் அதன் மேல் பகுதிகளை ஏன் உடைத்து வருகிறார்களென்பதை அறி யாமல் திணறினாள். அப்படி மேற்பகுதியை அவர்கள் மிக மும்முரமாகப் பெயர்த்துப் பலகைகளைத் தடால் தடா லென்று தள்ளிய ஓசை வேதனைப்பட்ட அவள் உள்ளத்தைத் திடீரெனத் தாக்கத் துவங்கவே அவள் அதிர்ச்சியுற்று நின்றாள். அந்த அதிர்ச்சியைக் கண்ட கண்டியத்தேவன் ஒருவகையில் ஆச்சரியமும் இன்னொரு வகையில் பிரமிப்பும் அடைந்தான். கோட்டை மாளிகை யில் செல்லமாக வளர்ந்த அந்தக் காரிகை மரக்கலத்தைப் பார்த்தவுடனேயே நிலைமையைப் புரிந்தகொண்டதை நினைத்து அவளுக்கு மரக்கல அமைப்பிலிருந்த அறிவை எண்ணி ஆச்சரியப்பட்டான். மரக்கலத்தின் நிலையை எண்ணி எண்ணித் திக்பிரமைக்கும் உள்ளானான். இந்த இருவகை உணர்ச்சிக்கு உள்ளான கண்டியத்தேவனை நோக்கிய மஞ்சளழகி, “தேவரே! மரக்கலத்தின் மேற் பகுதியைப் பிரிக்கிறீர்களே?” என்று வினவினாள் கவலை நிரம்பிய குரலில்.
“ஆம் மகாராணி.” என்றான் கண்டியத்தேவனும் கவலை தோய்ந்த குரலில்.
அவன் பதில் அவளைத் தூக்கி வாரிப் போட்டது. கண்டியத்தேவன் தன்னை ஏளனம் செய்கிறானா என்று அவன் முகத்தை ஏறிட்டு நோக்கினாள். அவன் முகத்தில் ஏளனக் குறி சிறிதுமில்லாததால் மிகுந்த குழப்பமடைந்து, “என்ன அப்படி அழைக்கிறீர்கள் தேவரே?” என்று வினவினாள்.
கண்டியத்தேவன் அவளை மிகுந்த மரியாதையுடன் திரும்பி நோக்கு, “என்ன கேட்கிறீர்கள் மகாராணி?” என்றான் மீண்டும்.
மஞ்சளழகியின் முகத்தில் குழப்பம் முன்னைவிட அதிகமாகப் படர்ந்தது. “நான் மகாராணியா?” என்று வினவினாள் குழப்பத்துடன் சற்றுக் கோபம் துளிர்த்த குரலில்,
“அப்படித் தணவிகுக்க வேண்டும்?” என்றான் கண்டியத்தேவன்.
“அப்படித்தானிருக்க வேண்டும் என்றால்?” கோபம் சற்று அதிகம் தொனித்த குரலில் எழுந்தது மஞ்சளழகியின் கேள்வி.
“இல்லாவிட்டால் இளையபல்லவர் உங்களை அப்படி அழைக்க மாட்டார்.
“இளையபல்லவரா! சோழர் படைத்தலைவரா?” ஆம்.
உ ர “அவர் அப்படி என்னை இதுவரை அழைக்க வில்லையே.
“இனிமேல் அழைக்கலாம்.
“எப்படித் தெரியும் உங்களுக்கு?”
“உங்களை மகாராணி என்று அழைக்கும்படி அவர்தான் கட்டளையிட்டிருக்கறார்.
“எப்பொழுது இட்டார் கட்டளை?”
“நேற்றிரவு.
“மஞ்சளழகியின இதயம் வேதனை அலைகளில் பல முறை புரண்டது. அவள் மனம் சில விநாடிகள் சென்ற இரவின் விபரீதத்தை, இளையபல்லவன் குடித்து உளறிக் கொண்டிருந்த நிலையை, எண்ணி எண்ணிப் புழுங்கியது. “நேற்றிரவு...நேற்றிரவு...” என்று இரண்டு மூன்று முறை காரணமில்லாமல் தனக்குள்ளேயே சொல்லிக் கொண் டாள், அக்ஷயமுனைக் கோட்டையின் செல்வி. அந்த இரவில் அவன் சொன்ன ஒவ்வொன்றும் அவளுக்கு நினைவிலிருந்தது. அந்தத் துன்ப நினைவில் சற்று இன்பமும் கலந்தது. அத்தனை உளறலிலும் இளையபல்லவன் தன்னை அடிக்கடி ‘மனைவி மனைவி’ என்று அழைத்ததை நினைத்துப் பார்த்தாள்! பலத்த அவன் உடல் தன் உடல் மீது குடி. வெறியுடன் சாய்ந்ததையும் எண்ணிப் பார்த்தாள். அந்த எண்ணங்களிலும் எத்தனை இன்பமிருந்தது அவளுக்கு. அவன் அறிவிழந்திருந்த நிலையில் கிடைத்த இன்பம் அது? அறிவுடனிருந்து அதெல்லாம் நடந்திருந் தால்? இப்படி எண்ணிய அவள் இதயம் வேதனையும் இன்பமும் கலந்த உணர்ச்சிகளால் இழுபட்டாலும், தான் இளையபல்லவனை விட்டுச் செல்லும்போதே இரவு மிகவும் ஏறியிருக்க, கண்டியத்தேவனை அவன் எப் பொழுது சந்தித்திருக்க முடியும். இந்த மகாராணிப் பட்டத் தைத் தனக்கு எப்பொழுது அளித்திருக்க முடியும் என்று யோசித்து, “தேவரே! நேற்றிரவு நீங்கள் அவரை எப் பொழுது சந்தித்தீர்கள்?” என்று வினவினாள்.
“நள்ளிரவு எட்டும் வேளை.” என்று பதில் கூறினான் கண்டியத்தேவன்.
“அப்பொழுதுதான் மகாராணிப் பட்டம் எனக் களிக்கப்பட்டதா?” என்று கேட்டாள் அவள், “ஆம் மகாராணி.” என்றான் கண்டியத்தேவன்.
“தேவரே! மீண்டும் அப்படி அழைக்க வேண்டாம்,” என்றாள் கண்டிப்பான குரலில்.
“இதை என்னிடம் சொல்லிப் பயன் இல்லை” என்றான் தேவன்.
“ஏன்?”
“இளையபல்லவர் உத்தரவை மீற எங்கள் யாருக்கும் துணிவில்லை.
“அவர் நேற்றிரவு இருந்த நிலையைப் பார்த்த ரல்லவா...” என்று துவங்கிய மஞ்சளழகி சட்டென்று தன் பேச்சை நிறுத்திக்கொண்டு சங்கடத்துடன் தேவனைப் பார்த்தாள். இரவில் தான் இளையபல்லவனின் அறையில் தனித்திருந்ததைக் கண்டியத்தேவன் புரிந்துகொண்டு விட்டால் என்ன செய்வதென்ற பீதி அவளைத் தடுமாறச் செய்தது.
கண்டியத்தேவன், “நீங்களும் நேற்றிரவு அவரைப் பார்த்தீர்களா?” என்றான் வியப்பு குரலில் விரிய.
மஞ்சளழகி தலையைக் குனிந்துகொண்டு, “ஆம் பார்த்தேன்.” என்றாள்.
“அப்பொழுது அவர்...” என்று இழுத்தான் கண்டியத் தேவன்.
“சுயநிலையில் இல்லை...” என்று முடித்தாள் மஞ்சளழகி, “ஆம், சுயநிலையில் அடியோடு இல்லை” என்று கண்டியத்தேவனும் ஒப்புக் கொண்டான்.
“அங்கு நீங்கள் எதற்காகப் போனீர்கள்?”
“ என்று கேட்டாள் மஞ்சளழகி.
“உத்தரவு வந்தது.” என்றான் கண்டி யத்தேவன்.
“யார் உத்தரவு?”
“படைத்தலைவர் உத்தரவு.
“காவலன் வந்து அழைத்தானா?” அதம்.
“ஐயோ, அவர் மதியிழந்த சமயத்தில் இட்ட உத்தர வல்லவா அது?”
“எந்தச் சமயத்தில் அவர் உத்தரவிட்டாலும் பணிய வேண்டியது எங்கள் பொறுப்பு.” இதைக் கண்டியத்தேவன் தட்டமாகச் சொன்னான்.
மஞ்சளழகி சிறிது யோ௫ித்துவிட்டுக் கேட்டாள். “அப்பொழுதுதான் என்னை மகாராணியென்று அழைக்கக் கட்டளையிட்டாரா?” என்று.
“ஆம்.
“வேறு என்ன கட்டளையிட்டார்?” சுண்டியத்தேவன் பதிலுக்கு மரக்கலத்தைச் சுட்டிக் காட்டினான்.
மஞ்சளழக திக்பிரமையுடன் அவனைப் பார்த்தாள்.
“மரக்கலத்தின் மேல்பகுதியைப் பிரிக்கச் சொல்லிக் கட்டளையிட்டாரா?” என்று கேட்டாள் அந்தப் பிரமை குரலிலும் அலைமோத.
“அப்படித் திட்டமாக உத்தரவிடவில்லை” என்றான் தேவன்.
“வேறு எப்படி உத்தரவிட்டார்?”
“இது சீனர் கப்பலல்லவா?” ஆம்.
“அதைப் பாரதத்துக் கப்பலாக மாற்றக் கட்டளை யிட்டார்.
“இரண்டுக்கும் வித்தியாசமுண்டா?”
“உண்டு. சீனர்கள் கப்பல் மரத்தின் எடை அதிகம். ஆகவே வேகம் குறைவு. பாரதத்தின் மரக்கலங்களில் மரத்தின் எடை குறைவு. ஆகவே வேகம் அதிகம். போரில் இரண்டுக்கும் இரண்டுவித உபயோகங்கள் உண்டு.
“சொல்லுங்கள் தேவரே!”
“னக் கப்பல்களின் எடை அதிகமாதலால் போரில் எதிரிக் கப்பல்களுடன் மோதும்போது அவை எதிரிக் கப்பல்களுக்கு பெரும் சேதத்தை விளைவிக்கும்.
எதிரிக் கப்பல்களின் அடி.
ப்பகுதியைச் துருவிச் சென்று துளை செய்துவிட நீண்ட இரும்பு ஆணியும் அவற்றின் அடியில் இருக்கும். பாரதத்தின் மரக்கலங்களில் மர எடை குறை வாதலால் மிகுந்த வேகத்துடன் பாய் விரித்துச் செல்லக் கூடியவை அவை.
“அகவே...
“இதை அக்ரமந்திரமாக்க உத்தரவு.
“அக்ரமந்திரம்! அந்தப் பெயர் சுரீலேன மஞ்சளழகி யின் உள்ளத்தில் பாய்ந்தது. முந்திய இரவு அறிவிழந்த நிலையில் இளையபல்லவன் உளறிய சொற்களில் அதுவும் ஒன்று. அதைப் போர்க் கப்பலென்றும் இளையபல்லவன் கூறியது மஞ்சளழகியின் நினைவுக்கு வரவே அவள் வியப்பின் வசப்பட்டாள். “ஆம்! என்னிடமும் கப்பல் களைப் பற்றி ஏதேதோ பெயர்களைச் சொன்னார்.” என்று வாய் விட்டுக் கண்டியத்தேவனிடம் கூறினாள்.
கண்டியத்தேவன் இமைகள் ஆச்சரியத்தால் உயர்ந்தன. “என்ன சொன்னார் தேவி” என்ற கண்டியத் தேவன் திடீரென ஏற்பட்ட அச்சரியத்தால் மகாராணிப் பட்டத்தை மறந்து பேசினான்.
“ஏதோ ஸர்ப்பமந்திரம், மத்திய மந்திரம், அக்ர மந்திரம் என்று சொன்னார்.” என்றாள் மஞ்சளழகி,
“வேறு என்ன சொன்னார்.” என்று கேட்டான் கண்டியத்தேவன் அவலோடு.
“தாரணி, லோலா, காமினி, தாரிணி, பேகினி...
இன்னும் ஏதேதோ சொன்னார்.
எல்லாம் நினைவில் இல்லை.” என்று கூறினாள் மஞ்சளழகி, கண்டியத்தேவன் முகம் ஆச்சரியத்தின் எல்லையைத் தொட்டது. “என்ன விந்தை இது!” என்று சொற்களையும் வியப்புடன் கொட்டினான். “எனக்கு ஏதும் புரியவில்லை. தேவி!” என்றும் சொன்னான்.
“என்ன புரியவில்லை?”
“இளைய பல்லவர் குடி வெறியிலிருந்தார்.
‘“ ஆம்.
“வெறியில் இத்தனை கோர்வையான பேச்சு எப்படி வரும்.
“என்ன கோர்வை அதில்?”
“ஸர்ப்ப மந்திரமென்பது தளத்தின் ஒரு கோடியி லிருந்து இன்னொரு கோடிவரை அறைகளை உடையது. அரசர்கள் பொக்கிஷம், புரவிகள், ஸ்திரீகள், இவர்களை ஏற்றிச் செல்ல உதவுவது. மத்திய மந்திரம் கப்பலின் நட்ட நடுவில் பெரும் அறையை உடையது, அரசர்களின் உல்லாசப் பயணத்துக்காக ஏற்பட்டது. அக்ரமந்திரம் கப்பலின் முனையில் அறையை உடையது, நீண்ட தூரப் பயணத்துக்கும், பெரும் கடற்போர்களுக்கும் உபயோகப் படுவது. இத்தனை மரக்கலங்களில் அவர் அக்ரமந்திரமாக இதை மாற்ற உத்தரவிட்டிருக்கிறார், தேவி, அவர் உளறலிலும் பொருள் இருக்கிறது.
“மஞ்சளழக கண்டியத்தேவனை ஏறெடுத்து நோக்கினாள். “என்ன பொருள் தேவரே?” என்றும் வினவினாள்.
“இந்த மரக்கலத்தை நீண்ட பயணங்களுக்கும், போர் களுக்கும், தேவையானபடி மாற்ற ஏற்பாடு செய்றார், இளைய பல்லவர்.” என்றான் கண்டியத்தேவன்.
“அதனாலென்ன?”
“அதனாலென்னவா! அவர் பார்வை தொலைவில் இருக்கிறது.
அக்ஷயமுனையில் அல்ல கண்ணோட்டம்.
“பின் எங்கே?”
“எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஓர் அபாய மிருக்கிறது தேவி.
“என்ன அபாயம்?”
“அதை நீங்களும் உணர்ந்துகொண்டீர்கள் மரக் கலத்தைப் பார்த்தவுடன்.
“ஆம் புரிந்தகொண்டேன். மரக்கலத் தளத்தைப் பிரித்தால் திரும்ப அமைக்க ஒரு மாத காலமாவது பிடிக்கும்.
“அந்த ஒரு மாத காலம் இளையபல்லவர் இங்கிருந்து நகர முடியாது.
“முடியாது.
“ஒரு மாத காலம் கடலிலும் கோட்டையிலும் நமக்கு நிம்மதி இருக்குமா?”
“இருக்காது.
“பூர்வகுடிகள்...
“நிலத்திலும் தாக்குவார்கள், நீரிலும் தாக்குவார்கள்.
“மஞ்சளழகியின் இந்தப் பதிலைக் கேட்டுக் திகைத்த கண்டியத்தேவன், “இந்த மரக்கலம் பெரும் பலமுடையது தேவி! நான்கு போர்க் கப்பல்களை இதைக் கொண்டு சமாளிக்கலாம். ஆனால் இதைப் பிரித்துவிட்டேன். இனி கடலில் நாங்கள் சிறகிழந்த பட்சிகள். கோட்டை நிலமை எனக்குத் தெரியாது.” என்றான்.
அங்கு நிலைமை சரியல்லவென்பதைப் புரிந்து கொண்டாள் மஞ்சளழகி. ‘குடிப்பழக்கமில்லாத இளைய பல்லவன் விழிப்புடனிருக்க முடியும். பூர்வகுடிகள் எதிர்ப்பைச் சமாளிக்க முடியும். ஆனால் குடித்து அறிவிழந்த தலைவர் என்ன செய்ய முடியும்! இதோ தளம் பிரிக்கப்படும் மரக்கலம் போலத்தான் அவரும். தளமிழந்த கப்பலும், மதியிழந்த தளபதியும் ஒன்றுதான்” என்று எண்ணமிட்ட மஞ்சளழகி பெருமூச்செறிந்தாள். இளைய பல்லவனின் மதியிழந்த நிலையைத் தந்தை கண்டிப்பாய் உபயோகித்துக் கொள்வார் என்று நினைத்துப் பெரும் வேதனைக்கும் உள்ளானாள்.
அப்படி வேதனைப்பட்டு நின்ற நிலையில் பின்னாலிருந்து, “மகாராணி!” என்று வந்த குரலைக் கேட்டுச் சரேலெனத் திரும்பிய அக்ஷயமுனைக் கோட்டை அழகி தன் பின்னால் சிரிப்புடன் இளைய பல்லவன் நிற்பதைக் கண்டு ஒருகணம் ஸ்தம்பித்தாள்.
அடுத்த விநாடி மிகுந்த சீற்றத்துடன் கேட்டாள்.
“நான் மகாராணியா?” என்று.
“ஆம்.” என்றான் இளையபல்லவன்.
“யார் சொன்னது?”
“நான் சொல்கிறேன்.
“எந்த ராஜ்யத்துக்கு நான் ராணி?”
“என் மன ராஜ்யத்துக்கு.
“வீண் மனோராஜ்யம்?”
“மனோராஜ்யங்கள் பலிப்பது உண்டு. என் இதய ராணி, வா இப்படி!” அவள் வரவில்லை.
அவனைக் கடந்து விடுவிடு வென்று கோட்டையை நோக்கி நடந்தாள். அவள் போவதைப் பார்த்துக்கொண்டே நின்றான் இளைய பல்லவன், அந்தச் சமயத்தில் படைத் தலைவனின் முகத்தில் புரியாத ஏதோ ஓர் ஓளி, அளவிட முடியாத ஏதோ ஓர் ஆழமான பார்வை படர்ந்து கிடப்பதைக் கண்டியத்தேவன் கண்டான். அவன் ஊகத்துக்குத் துணை செய்வதுபோல் உதிர்ந்தன படைத்தலைவன் வாயிலிருந்து சொற்களும். “நீ மகாராணி ஆகலாம் மஞ்சளழகி! ஆனால் உனக்கு அதிர்ஷ்டமில்லை.” என்று கூறிய இளைய பல்லவன் பெருமூச்செறிந்தான்.
பிறகு வெகு வேகத்துடன் கண்டியத்தேவனை நோக்கி, “வாரும் தேவரே?” என் றழைத்துக் கொண்டு மரக்கலத்தை நோக்கி விரைந்தான்.
மரக்கலத்துக்கு அருகே வந்த பிறகும் இளைய பல்லவன் முகத்தில் அழமான பார்வையே விரிந்து கிடந்ததைக் கண்ட கண்டியத்தேவன், படைத்தலைவன் இதயத்தில் ஏதோ பெரும் ரகசியமொன்று புகுந்து கொண்டிருப்பதைப் புரிந்து கொண்டானானாலும் அந்த ரகசியம் என்னவாயிருக்க மூடியும் என்பதை உணர முடியாததால் படைத்தலைவன் முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றான். சிறிது நேரம் கழித்து அவனை நோக்கித் திரும்பிய படைத்தலைவனின் முகத்தில் புன்முறுவலில்லை.
மதுவெறியுமில்லை.
மிதமிஞ்சிய கவலையே மண்டிக் கடந்தது.
“மரக்கலத்தை மாற்றியமைக்க எத்தனை நாளாகும் தேவரே?” என்ற இளைய பல்லவன் கேள்வி யிலும் அந்தக் கவலை பிரதிபலித்தது. “ஒரு மாத காலம் ஆகும். அதற்குக் குறைவில்லை. “என்றான் தேவன்.
இளையபல்லவன் சில விநாடிகள் ஏதோ யோசித்தான். “அகலாம் ஆகட்டும். ஒரு மாத காலம்தான் உமக்குக் கொடுக்க முடியும்.” என்றான்.
“அதற்குப் பின்?”
சட்டென்று வந்தது இளையபல்லவனின் பதில். ஆனால் பதிலின் வேகம் சொல்ல முடியாததாயிருந்தது. அதைக் கேட்டுப் பெரும் அதுர்ச்சியடைந்தான் கண்டியத் தேவன். அந்தப் பதிலைத் தொடர்ந்து இளையபல்லவன் கூறிய வார்த்தைகள் அந்த அதிர்ச்சியை ஆயிரம் மடங்கு அதிகப்படுத்தின. ஏதோ பெரும் விபரீதத்துக்கு அக்ஷய முனையில் அஸ்திவாரம் போடப்படுகின்றது என்பதை மட்டும் தேவன் புரிந்தகொண்டான். அளவிட மூடியாத ஆபத்தும், தலை விளைவிக்கும் முடிவுகளும் அந்தத் துறைமுகத்தில் ஏற்படும் காலம் அதிகத் தூரத்திலில்லை என்பது கண்டியத்தேவனுக்கு நன்றாகத் தெரிந்தது.